fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

6 வருடம் கழித்து வெளிவந்த மேகா ஆகாஷ் நடித்ததுள்ள ஒரு பக்க கதை விமர்சனம்.. அறிவியல் வளர்ச்சி எப்படி மூடநம்பிக்கையாக மாறுகிறது

oru-pakka-kathai

Reviews | விமர்சனங்கள்

6 வருடம் கழித்து வெளிவந்த மேகா ஆகாஷ் நடித்ததுள்ள ஒரு பக்க கதை விமர்சனம்.. அறிவியல் வளர்ச்சி எப்படி மூடநம்பிக்கையாக மாறுகிறது

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணீதரனின் இயக்கத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனரின் இரண்டாவது படமாக வெளியாக வேண்டிய படம், எனினும் சில பல காரணங்களால் நேரடி OTT ரிலீஸ் ஆகியுள்ளது.

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் காதலித்து வரும் சூழலில், இருவீட்டாரும் படித்து முடித்து செட்டில் ஆனதும் திருமணம் என முடிவு எடுக்கின்றனர். இந்நிலையில் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். இருவீட்டாரும் திருமண ஏற்பாடு செய்ய, தாங்கள் இருவரும் கன்னி தன்மையுடன் தான் இருக்கிறோம் என இருவரும் புரியவைக்கின்றனர் பெற்றோரிடம். அறிவியல் சார்ந்த விளக்கம் அனைத்து வித ஆடியன்ஸுக்கும் புரியும் படி அந்த பகுதிகளை கையாண்ட இயக்குனருக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ்.

திருமணம் முடிய, பெண் குழந்தை பிறந்து வளருகிறாள். ஒரு புறம் கடவுளின் அவதாரம் என மடத்தை சேர்ந்தவர்கள் அபகரிக்க, கோர்ட் கேஸ் என செல்கிறது கதை. இறுதியில் சில பல ட்விஸ்டுக்கு பின் பெற்றோரிடம் மகள் இணைகிறாள்.

சினிமாபேட்டை அலசல் – கோவிந்தின் இசை மற்றும் பிரேமின் ஒளிப்பதிவு பக்கபலம். நடிகர், நடிகையர் தேர்வும் சிறப்பே. நம்மை சிந்திக்க வைக்கும் படம். அறிவியல் வளர்ச்சி எப்படி மூடநம்பிக்கையாக மாறுகிறது என அழகாக படம் பிடித்துள்ளார்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – மலையாள சினிமாவில் இது போன்ற யதார்த்த சினிமா நல்ல வரவேற்பை பெரும். நம் கோலிவுட்டில் மக்கள் பார்க்க தயாராக இருந்தாலும், வணிக வியாபார நோக்கின் காரணமாக படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற படங்கள், பிலிம் பெஸ்டிவல் சென்று பின் ரிலீஸ் ஆகும் பட்சத்தில் இந்திய அளவில் கூட ரீச் பெரும்.

தன் முந்தைய படங்களை போல வித்தியாசமான கதையுடன், இதுவே என் ஸ்டைல் ஆப் சினிமா என சொல்லியுள்ளார் இயக்குனர். இது போன்ற படங்களையே தொடர்ந்து பாலாஜி தரணீதரன் எடுக்க வேண்டும் என்பதே சினிமா பேட்டை டீம்மின் வேண்டுகோள் கூட. வாழ்த்துக்கள் சார்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3 /5

oru pakka kathai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top