ஒரு குப்பை கதை

‘ஒரு குப்பையான விஷயத்தைப் பெரிது படுத்தினால், அந்தப் பிரச்னை வாழ்க்கையின் எவ்வளவு தூரத்துக்குக் கொண்டுசென்று நிம்மதியைக் குலைக்கும்’ என்பதே இப்படத்தின் ஒன்லைன். புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறாராம், அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி.

Oru Kuppai Kathai

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றுள்ள தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம். நாயகியாக மனிஷா யாதவ் நடித்திருக்கிறார். யோகி பாபு, ஜார்ஜ், சுஜா, ஆதிரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, பாடலாசிரியராக நா.முத்துக்குமார், இசையமைப்பாளராக ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டராக கோபிகிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

Oru Kuppai Kathai

படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம், உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்தவர், டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடிப்பைப் பாராட்டியதுடன், ‘சமூகத்துக்கு இதுபோன்ற படங்கள் இப்போதைய அவசியத் தேவை’ என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தியதோடு, ‘ஒரு குப்பைக் கதை’ படத்தைத் தானே வெளியிடவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாவது சிங்கிள் பாடல்

இன்று மாலை சிவகார்த்திகேயன் இப்படத்தில் நா. முத்துக்குமார் வரிகளில், வேல்முருகன் பாடியுள்ள பாடலை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.