fbpx
Connect with us

Cinemapettai

குப்பையில் பூத்த ரோஜா – ஒரு குப்பை கதை திரை விமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

குப்பையில் பூத்த ரோஜா – ஒரு குப்பை கதை திரை விமர்சனம்.

அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, பாடலாசிரியராக நா.முத்துக்குமார், இசையமைப்பாளராக ஜோஸ்வா ஸ்ரீதர், எடிட்டராக கோபிகிருஷ்ணா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள்.

கதை

சென்னையில் இருந்து ஓசூர் செல்லும் நம் ஹீரோ, காவல நிலையத்தில் தான் கொலை செய்துவிட்டதாக சரண் அடைகிறார். அதன் பின் பிளாஷ் பேக்கில் செல்கிறது கதை.

மாநகராட்சியில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்களில் நம் ஹீரோ குமாரும் (டான்ஸ் மாஸ்டர் தினேஷ்) ஒருவர். கூவம் அருகில் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார். 7 வருடம் ஆக பெண் தேடியும் மனமாகவில்லை இவருக்கு. நண்பர்கள் உதவி கொண்டு வால்பாறை சென்று பூங்கொடி (மனிஷா யாதவ்) என்பவரை மனம் முடிக்கிறார். ஹீரோயினின் அப்பா வேண்டுகோளுக்கு இணங்க மிக முக்கியமான உண்மையை மறைத்து நடக்கிறது இவர் கதை.

உண்மை தெரியவந்ததும் கர்பமாக ஹீரோயினின் ரியாக்ஷன் என்ன , அவர் எடுக்கும் முடிவு என்ன ? தன் தவறை திருத்த ஹீரோ செய்யும் செயல்கள் என்ன என்று நக்ரகிறது கதை. தான் எதிர்பார்த்த கனவு வாழ்க்கை தனக்கு கிடைக்கவில்லையே என்பதால் அவள் எடுக்கும் விபரீத முடிவு என்று உளவியல் பிரச்சனைகளை சொல்கிறது இப்படம்.

சினிமாபேட்டை அலசல்

நாம் அன்றாடம் கேள்விப்படும் சம்பவம் தான் படம். எனினும் அதனை கைதேர்ந்த முறையில் இயக்குனர் கையாண்ட விதம் சூப்பர். “அரசனை நம்பி புருஷனை விடக்கூடாது” என்பது தான் படத்தின் கான்செப்ட். எனினும் யதார்த்தம் குறையாமல் படத்தை எடுத்த விதம் அருமை. கனகச்சிதமாக நடிகர் நடிகை தேர்ந்துடத்தற்கு ஸ்பெஷல் பாராட்டு சொல்லியே ஆக வேண்டும். அடல்ட் ஒன்லி, மசாலா ஜானர் படங்களுக்கு மத்தியில் இது போல யதார்த்த நிலை மாறாத படம் வேற பீல் கொடுக்கிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

ஏற்கனவே “அங்காடி தெரு”, “காக்கா முட்டை” போன்ற படங்களில் இது போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து வெற்றியும் கண்டுள்ளனர். அது தான் இயக்குனருக்கு படத்தை எடுப்பதற்கு உந்துதலாக இருந்திருக்கும். எனினும் குப்பத்தில் உள்ள அனைவரும் நல்லவர் என்பதும், படித்தவன் அயோக்கியன் என்று சித்தரிப்பது சற்று நெருடல் தான். எனினும் எமோஷன்ல விஷயத்தில் இந்த சில குறைகள் மறைந்து விடுகின்றது.

ஆகமொத்தத்தில் திருமணம் என்னும் பந்தத்தில் இரு நபரின் வித்தியாசமான ஆசைகள், கனவுக்குள் எப்படி வேறு படம் என்பதை நம் கண் முன்னே காட்டிய இந்த டீமுக்கு ஸ்பெஷல் சபாஷ். மேலும் இத்தகைய படத்தை வெளியிட்ட உதயநிதி அவர்களுக்கும் க்ளாப்ஸ்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top