சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் சசிகலா உறவினர் வசம் இருக்கிறதாம்… இதை எந்த நிமிடத்திலும் சசி கோஷ்டி ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் தீரவில்லை. அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார். இருந்தாலும் இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ எடுக்கப்பட்டதாக சசிகலா தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சசிகலா உறவினர் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை காலத்தில் செல்போனில் நான்கு வீடியோக்கள் எடுக்கப்பட்டன. நர்ஸ் மூலம் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகளை சசிகலா உறவினர் ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் என்றார்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான இதய முடக்கம் எப்படி ஏற்பட்டது? என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவோ, எய்ம்ஸ் மருத்துவர்களோ விளக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் சந்தேகம் நீடிக்கிறது.

இந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும் இந்த வீடியோ காட்சிகள் இருப்பதாக உறுதிசெய்துள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளில் சசிகலாவை, ஜெயலலிதா கடுமையாக வசைபாடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் இங்க எவ்வளவு கஷ்டப்படுறேன். உங்களுக்கு எதாவது கவலை இருக்கா?’ என இடம்பெற்றுள்ளதாம்.

இதை தாண்டி ஜெயலலிதா, சசிகலா இடையே விவாதங்கள் வெளியிடவே முடியாத அளவு உள்ளதாகவும் எனவும் கூறப்படுகிறது. தவிர, பரம எதிரியையும் அவரது குடும்பத்தினரையும் கேவலமாக ஜெயலலிதா விமர்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காட்சிகளை எடுத்த நர்ஸும் ரகசியம் காக்கிறார். இருந்தாலும் எந்த நேரத்திலும் இந்த வீடியோக்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.