பிரியா பிரகாஷ் வாரியர்

18 வயது தான் ஆகிறது. இவர் நடிப்பில் முதல் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் செலிபிரிட்டி அந்தஸ்துடன் வளம் வருபவர் என்பது தான் கூடுதல் சிறப்பு. “ஒரு ஆதார் லவ்” என்ற படத்தில் உள்ள “மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய வீடியோ கிளிப் மூலமாக பிரபலமானார் . சென்ற மாதம் வாலெண்டைன்ஸ் வாரம் முழுவதும் இளசுகளிடம் இவரின் பாடல் தான் ட்ரெண்டிங் .

priya

சமூகவலைத்தளங்களான பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம்மில் ஏக டிமாண்ட் ஆகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் 4 . 9 மில்லியன் வியூர்ஸ் உள்ளனர். ஸ்போர்ட்ஸில் ரொனால்டோ, ஹாலிவுட்டில் டாம் கிருஸ், மாலிவூடில் துல்கர் சல்மான் கூட கணக்கு ஆரம்பித்த ஒரு நாளில் இவ்வளவு பெயர் பின் தொடர்ந்தது கிடையாதாம்.

Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof.

இந்நிலையில் ஒரு ஆதார் லவ் ஹீரோ ரோஷன் மற்றும் ஹீரோயின் பிரியா இருவரும் தங்கள் நண்பர்களுடன் வண்ணங்கள் பூசி ஹோலி கொண்டாடுவது போன்ற விடியோவை படக்குழு யூ டியூப்பில் ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த விடியோவை பார்த்த பலரும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை புகழ்ந்து வருகின்றனர்.