Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைரலாகுது தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில் அஜித்துக்கு சொல்லிய பிறந்தநாள் வாழ்த்து !
ஓ பண்ணீர்செல்வம்
மே 1-ம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டால், நம் தமிழகத்தில் அதனுடன் சேர்த்து தல அஜித்தின் பிறந்தநாளும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு தான். அஜித்குமாரின் 47-வது பிறந்த நேற்று முன்தினம் முடிந்தது. இவர் வழக்கம் போலவே எந்த அறிவிப்போ, அல்லது போட்டோவோ, ரசிகர்கள் சந்திப்போ என்று எதுவும் செய்யவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் இவரின் ரசிகர்கள் ஹாஸ் டாக் இட்டு ட்ரெண்டிங் ஆக்கினர் அந்த தினத்தை.

Thala
இந்நிலையில் அன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , நடிகர் அஜித்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அந்த டிவீட்டில் உங்களுக்கு ஆரோக்கியம், சந்தோசம், மற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கட்டும் என்று கூறிவிட்டு. பின்னர் உங்களின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமையட்டும் என்றும் கூறியுள்ளார்.
Wishing Actor Ajith kumar for his good health, happiness and success in all his future endeavours on his birthday. Wishing him all success in his acting career. #HappyBirthdayAjithkumar
— O Panneerselvam (@OfficeOfOPS) May 1, 2018
இந்த ஒற்றை ட்வீட் 9000 க்கு மேல் லைக்கும், 4000 துக்கும் மேல் ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

AK
மேலும் கமெண்டில் அஜித், விஜய் ரசிகர்கள், அரசியல் பேசுபவர்கள் என்று பலவாறு தங்களின் தாறுமாறு கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்கள் .
