ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் மாணவர்கள், ஐடி ஊழியர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு போராடி வருகிறார்கள்.

சிலர் குடும்பமாக வந்து போராடி வருகிறார்கள். இதில் குழந்தைகளும் சிறுவர்களும் அடக்கம். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமரை சந்தித்துப் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், ” ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும். விரைவில் வாடிவாசல் திறக்கப்பட்டு காளைகள் துள்ளிக்குதிக்கும். மக்கள் விருப்பப்பட்டால் நானே அதை தொடங்கி வைப்பேன்” என கூறியுள்ளா