Connect with us
boomerang-movie

ஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு ? – போலீஸ் அதிர்ச்சி தகவல்!

ஜெ., கார் டிரைவர் கனகராஜ் கொலையில், ஓ.பி.எஸ் மகனுக்கு தொடர்பு ? – போலீஸ் அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதாவின் கோட்டையான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார் டிரைவர் கனகராஜுக்கும் , முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக விசாரணையில் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, விசாரணை அதிகாரிகளால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

சேலம் மேற்கு மாவட்ட, அதிமுக செயலாளராக இருந்து சரவணனின் பரிந்துரையின் பேரில் கனகராஜ் போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், கொடநாடு பங்களாவில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இருப்பினும், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலருடன் கனகராஜ் தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், அவர் விபத்தில் உயிரிழப்பதற்கு, சில நாட்கள் முன்பு சென்னை வந்து அதிமுக பிரமுகர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்போது பன்னீர்செல்வம் வீட்டுக்கும் வந்து அவரது இரண்டாவது மகன் ஜெய் பிரதீப்புடன், கனகராஜ் சந்தித்து பேசியிருக்கிறார். அவருடைய செல்போனில் இருந்த இரண்டு சிம் கார்டுகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, டிரைவர் கனகராஜ் யாருடன் எல்லாம் செல்போனில் பேசினாரோ, அவர்களை எல்லாம் வரவழைத்து விசாரிக்க விசாரணை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பன்னீர் செல்வத்தின் , இளைய மகன் ஜெய் பிரதீப்பை நோக்கி விசாரணை வளையம் நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top