முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்தார். இதற்கான காரணம் தெரியவில்லை. அஞ்சலி செலுத்தினாரா? அல்லது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாரா என தெரியவில்லை.

வாட்ஸ் அப் தகவல் ஒன்று அவர் பேட்டியளிக்க உள்ளதாக கூறுகிறது. 40  நிமிடங்களுக்கு மேலாக ஆழ்ந்த தியானத்தில் இருந்த பன்னீர் செல்வம் கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தார்.

சசிகலா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார் ஓ. பன்னீர் செல்வம். திரைமறைவில் இத்தனை நாட்களாக நடைபெற்ற அனைத்து விசயங்களை ஊடகங்கள் முன்பு போட்டுடைத்தார். தன்னை கட்டாயப்படுத்தி முதலமைச்சர் பதவியில் இருந்த ராஜினாமா செய்ய வைத்ததை அம்பலப்படுத்தினார். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதை வாபஸ் வாங்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.