o panneer selvam

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் அணியை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில், தற்போது பதவிப்போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை தங்கள் அணிக்கு இழுக்க ஓபிஎஸ் தரப்பினர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உளவுத்துறை மூலம் கூவத்தூரில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களிம், போன் நம்பர்களை பெற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று வெளியிடப்படும் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை அதிரடியாக மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை, சசிகலாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் சட்டமன்றத்தில் பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சசி தரப்பு எம்எல்ஏக்களிடம் பேசி தனக்கு சாதகமாக வாக்களிக்க சொல்ல ஓ.பி.எஸ் தரப்பில் முயற்சி மேற்கொள்ள  இருப்பதாகவும் கூறப்படுகிறது.