o paneer selvam

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததற்காக பன்னீர் செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் புதிய அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி “பன்னீர் செல்வம் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டார் என்று பன்னீர் செல்வத்தின் துரோகத்தை ஜெயலலிதாவின் ஆவி மன்னிக்காது” என்று தெரிவித்துள்ளார்.