fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பன்னீர்செல்வம் ரகசிய திட்டம், அதிமுகவில் விரிசல்! சசிகலாவுக்கு நெருக்கடி!

sasikala-pannerselvam_CinemaPettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பன்னீர்செல்வம் ரகசிய திட்டம், அதிமுகவில் விரிசல்! சசிகலாவுக்கு நெருக்கடி!

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த இடைக்கால முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது கலகக் குரல் எழுப்ப தயாராகிவிட்டார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமித்தது மத்திய அரசு. சசிகலா தரப்பினரின் நெருக்கடிகளுக்கு இடையே மத்திய அரசு மற்றும் திமுகவின் ஆதரவுடன் முதல்வர் பதவியில் தொடர்ந்து வந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

சசிகலா தரப்பு நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்த நிலையில் வேறுவழியில்லாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம்.

இது மத்திய அரசு மற்றும் திமுகவை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்தது. சசிகலா அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னமும் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தாமதப்படுத்தும் மத்திய அரசு இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை முன்வைத்து சசிகலா பதவியேற்பை தாமதப்படுத்துகிறது மத்திய அரசு. இந்நிலையில் பன்னீர்செல்வம், அதிமுகவில் உள்ள 31 தலித் எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையை ஓபிஎஸ் தரப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணியும் திமுகவும் கைகோர்த்து ஒரு பொம்மை அரசாங்கத்தை உருவாக்கி சசிகலா முதல்வராவதைத் தடுத்துவிடலாம் என்பது மத்திய அரசின் திட்டம் என்கின்றன டெல்லி தகவல்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top