Connect with us

Cinemapettai

சாராயம் விற்க திமுகவை நாடியது சசியா, நானா? வேண்டாம் என் வாய பிடுங்காதீங்க

sasikala

Politics | அரசியல்

சாராயம் விற்க திமுகவை நாடியது சசியா, நானா? வேண்டாம் என் வாய பிடுங்காதீங்க

ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி சரவெடிகளைத் தொடர்ந்து அதிமுக தரப்பு ஆடிப் போய் உள்ளது. சசிகலா முதலமைச்சராக பொறுப்பு ஏற்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அந்த கடுப்பில் வீட்டை விட்டு வெளியே வந்த சசிகலா ஒ.பன்னீர் செல்வத்தை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கினார்.

திமுக தான் ஒ.பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்குகிறது. ஒபிஎஸும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்கிறார்கள் என சசிகலா தெரிவித்தார்.

தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிவிட்ட ஓபிஎஸ் சும்ம இருப்பாரா? சசிகலாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக ஆதரவாளன் நான் அல்ல. சசிகலா தான் மிடாஸ் ஆலைக்காக திமுகவினரைச் சென்று சந்தித்தார்.

எனவே, அதிமுகவினருக்குத் தெரியும் யார் திமுகவின் பக்கம் இருந்தனர் என ஓபிஎஸ் காட்டமாகத் தெரிவித்தார்.

ஒபிஎஸ் பதிலடி குற்றச்சாட்டுகள் அதிமுக தரப்பில் மேலும், பல விளைவுகளைச் செய்துள்ளது.

இதுபோல மேலும் பல குற்றசாட்டுகளை ஒபிஎஸ் இன்னும் சற்று நேரத்தில் சொல்ல இருப்பதால் மேலும் பற்பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தத்தில் சசியின் கனவுக்குக் ஒட்டு மொத்தமாக வேட்டு வைத்துவிட்டார் ஓபிஎஸ் என சொல்லலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top