சசிகலாவுக்கு எதிராக, ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ள வாகனம் தற்போது தயார் ஆகியுள்ளது.

ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்ட ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக அதிரடியாக களமிறங்கினார். இதனையடுத்து அதிமுகவில் பல உட்கட்சி பூசல் ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து சசிகலா முதல்வராவதற்கான வாய்ப்பு தகர்ந்தது. அதன் பின் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அனைத்து எம்.எல்.ஏக்களும் தன் பக்கம் வருவார்கள் என எதிர்பார்த்த ஓபிஎஸ்க்கு 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சசிகலா ஜெயலலிதாவுக்கும், தமிழகத்திற்கும் செய்த துரோகம் குறித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

தற்போது ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வாகனம் ஓபிஎஸின் வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.