Politics | அரசியல்
ஓபிஎஸ் வாங்கிய காரின் விலையை கேட்டால் தலை சுற்றும்.. நடிகர்களை மிஞ்சிய அரசியல்வாதி
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதன்முதலில் சபாரி, ஸ்கார்பியோ வகையான கார்களை பயன்படுத்தினார். தற்போது சோனியா காந்தி, ராஜா, கனிமொழி, ஸ்டாலின் உபயோகப்படுத்தும் வகையான கார்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கியதால் டொயோட்டா லேண்ட் க்ரூஸர்க்கு மாறினார். தற்போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ரேஞ்ச் ரோவர் காரில் வலம் வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வகை கார்களின் உச்சக் கட்ட மதிப்பு 4 கோடியைத் தாண்டுமாம். தற்போது வெளிநாடு பயணம் செல்லும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக இடைநிலை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருப்பார் நின்று மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வந்துவிட்டதாம்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வரை இன்னோவா கார் தான் பயன்படுத்துகிறார். கார் தானே என்று நினைத்தால் இவர்கள் வாங்கும் கார்களின் விலைகள் தலையை சுற்றுகிறது.
