Connect with us
Cinemapettai

Cinemapettai

stalin

Tamil Nadu | தமிழ் நாடு

எதிர்க்கட்சியின் புதிய பிரச்சார அறிவிப்பால்.. திணறும் மாவட்டச் செயலாளர்கள்!

விரைவில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் தற்போது சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின், புதிய பிரச்சார அறிவிப்பால் அந்த கட்சி நிர்வாகிகள் திணறி வருகிறது.

ஏனென்றால் 30 நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று, அங்குள்ள மக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்று, அதன் பின்பு திமுக ஆட்சி அமைத்தால், 100 நாட்களில் அந்த மனுவில் கோரிக்கைகள்  தீர்த்து வைக்கப்படும் என்று ஸ்டாலின் சபதம் எடுத்துள்ளார்.

இத்தகைய அறிவிப்பால் திமுக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பல லட்சம் மக்களின் பிரச்சினைகளை வெறும் மூன்றே நாட்களில் எப்படி தீர்வு காண முடியும்? என்ற நியாயமான சந்தேகம் அவர்களிடையே எனத் தொடங்கி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக செயல்பட்டுவரும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர்கள் நடத்திவரும் வாராந்திர கூட்டங்கள் இனி என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுகிறது.

dmk-cinemapettai

ஆகையால் தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை திமுக முறைப்படுத்த வேண்டும் என்பதே அந்தக் கட்சியின் நிர்வாகிகளின் கோரிக்கையாகும். அதுமட்டுமில்லாமல் திமுக பிரச்சார கூட்டத்தில் ஆகும் செலவிற்காக மேலிடத்தில் இருந்து எந்த ஒரு பண உதவியும் திமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கவில்லை என்று புலம்பித் தள்ளுகின்றனர்.

ஏனென்றால் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமென்றால் ஆட்களை திரட்டுவது அவர்களுக்கு ஆகும் செலவு என ஏகப்பட்ட செலவிருப்பதால், அதனை மாவட்ட செயலாளர்களின் தலையின் மீது மீண்டும் மீண்டும் சுமையாய் இறக்கி வைக்கிறார் ஸ்டாலின்.

அதுமட்டுமில்லாமல் தலைமையிடத்தில் இருக்கும் பணத்தை செலவழிக்க மனமில்லையா? ஏன் எங்களை இந்தப் பாடு படுத்துகிறார்களே! இந்த முறையும் ஜெயிப்பது கஷ்டம் தான்! என ஒரு திமுக மாவட்ட நிர்வாகியை நொந்து கொள்ளுகிறார்.

Continue Reading
To Top