திருச்சியில் வாரிசு அரசியலின் பிரம்மாண்ட கட் அவுட்.. கடுப்பான கட்சி உறுப்பினர்கள்!

அண்மையில் அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு வழங்கியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிமுக கட்சி பலவிதமான உத்திகளை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது திமுக கட்சி மேற்கொண்ட தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

மேலும் தொடர்ந்து இரண்டு முறை தோல்வியை மட்டுமே சந்தித்த திமுக, இந்த முறை கட்டாயமாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இச்சூழ்நிலையில் திமுக கட்சியின் பிரச்சாரம் திருச்சியில் நடக்கவிருக்கிறது. அதற்கான முதல் ஏற்பாடாக ஒரு கட்டவுட் ஒன்று திருச்சியில் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின், அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரின் உருவ படம் கொண்ட கட்டவுட் மட்டும் திருச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இது அந்த கழக உறுப்பினர்கள் முதல் கட்சி தொண்டர்கள் மற்றும் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.

இதனால் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை எவருடைய பெயரையும் கூட குறிப்பிடாத வண்ணம் திமுக தலைமை நடந்து கொள்வது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் இதற்கான சுற்றறிக்கை திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் திமுகவின் அனைத்து பேனர்களிலும், போஸ்டர்களிலும், கட் அவுட்களிலும் ஸ்டாலினுடைய பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சி கலைஞர் கருணாநிதி அவரை தொடர்ந்து ஸ்டாலின், தற்போது ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பது உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்