Connect with us
Cinemapettai

Cinemapettai

dmk-protest

Tamil Nadu | தமிழ் நாடு

விவசாயிகளை ஏமாற்ற போலி நாடகமாடும் எதிர்க்கட்சி.. பஞ்சாப் விவசாயிகளுக்கு தமிழகத்தில் எதற்கு போராட்டம்?

சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருவது விவசாயிகளின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தான்.

மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக அரசு இந்த வேளாண் திட்டங்களை ஏற்றுக் கொண்டபோது, எதிர்க்கட்சி இரண்டு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

அதுமட்டுமில்லாமல், அதிமுக அரசு ஏன் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது என்றும், தமிழக விவசாயிகளுக்கு இந்த சட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெளிவாக கூறிய பிறகும் கூட திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப்  போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதாவது பாராளுமன்றத்தில் வேளாண் தொடர்பாக விலை உதவி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தக சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் என மூன்று சட்டங்கள் இயற்றப்பட்டன.

மேலும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விலை உறுதியளிக்கும் மற்றும் பண்ணை ஒப்பந்த சட்டத்தை கொண்டு, தமிழகத்தில் கோகோ, கரும்பு, கோழிப்பண்ணை ஆகியவற்றில் நடைமுறையில் உள்ள பண்ணை ஒப்பந்த முறையை ஒழுங்கு படுத்தலாம் என்று தமிழக அரசு உறுதி அளித்தது.

அதேபோல், வாணிகம் மற்றும் வர்த்தக சட்டத்தை கொண்டு வேளாண் பொருட்களை விவசாயிகள் ‘டிரேட் ஏரியா’ என்று குறிப்பிடப்படும் எந்த இடத்திலும் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யலாம் என அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் சுதந்திர தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது.

stalin

இதற்காக தமிழக அரசு, குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெறும் நெல் கொள்முதல்கள் பாதிக்காது, உழவர் சந்தை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும், எதிர்பாராத திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் போன்ற பல விளக்கங்களை தெளிவாக அளித்துள்ளது.

ஆனால், இதை எதையுமே புரிந்து கொள்ளாத திமுகவினர் சட்டங்கள் நிறைவேற்றும்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தற்போது அரசியல் நோக்கினை மையமாகக் கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திமுகவினர் போராட்டத்தை நடத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று பல தரப்பினரும் கூறிவருகின்றனர்.

ஏனென்றால், இது முழுக்க முழுக்க பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கான பிரச்சனை என கூறப்படுகிறது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய விளைபொருட்கள் ஆக கருதப்படும் நெல், கோதுமைகளுக்கு சந்தை கட்டணம், உள்ளாட்சி மேம்பாட்டு கட்டணம், இடைத்தரகர் கட்டணம் என 3 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பொருட்கள் வாங்கும் வணிகர்களிடமிருந்து வசூலிக்க படுவதால், பஞ்சாப் மாநில அரசிற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என அம்மாநில அரசு தெரிவிக்கிறது.

மேலும் பஞ்சாப்பில் உள்ள சந்தைகளையும், அங்குள்ள விவசாயிகளையும் இடைத்தரகர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் இடைத்தரகர்கள் தற்போது விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனராம். இதற்கு அம்மாநில அரசும் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் ஒத்துழைப்பு கொடுக்கிறதாம். இதனால்தான் பஞ்சாபில் போராட்டம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு ஆதரவாக தற்போது திமுக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. எந்த விதத்திலும் நியாயமே இல்லை என்று பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

dmk

Elections- Congress president Rahul Gandhi in Tamil Nadu

Continue Reading
To Top