பெண்களை கொச்சைப்படுத்திய வீடியோ.. இந்திய அளவில் வலுக்கும் எதிர்ப்பு

உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் இந்தியாவில்தான் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் பலாத்கார சம்பவங்கள் இந்தியாவில் தான் தலைவிரித்து ஆடுகிறது. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 90க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

வயது வித்தியாசம் பார்க்காமல் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு நீதி கேட்டு பல போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கொடுமைகள் குறைவதற்கு பதிலாக இன்னும் அதிகமாகத் தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெண்களை கேலிக்கூத்தாக்கும் சில விளம்பரங்கள் தான்.

சமீபகாலமாக வெளிவரும் விளம்பரங்களில் பெண்களை கொச்சைப்படுத்துவது போன்ற பல விஷயங்கள் காட்டப்படுகிறது. அதிலும் ஒரு ஆண் குறிப்பிட்ட கம்பெனியின் பெர்ஃப்யூமை பயன்படுத்தும் போது அதில் மயங்கி பெண்கள் அவர் பின் செல்வது போன்று காட்டப்படுகிறது.

மற்றொரு விளம்பரத்தில் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் நான்கு இளைஞர்கள் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து செல்கின்றனர். நாம் நான்கு பேர் இருக்கிறோம் இங்கு ஒன்றுதான் இருக்கிறது என்று அவர்கள் இரு பொருள்பட பேசுவதை கேட்டு அந்தப் பெண் அதிர்ந்து போகிறார்.

பின்பு தான் தெரிகிறது அந்த இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் பெர்ஃப்யூமை பற்றி பேசிக் கொண்டிருப்பது. பெண்களை கொச்சைப்படுத்தும் அளவுக்கு இருக்கும் இந்த வீடியோவுக்கு தற்போது பல இடங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் உள்ளாடை போன்ற பல விளம்பரங்களும் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பலரும் இந்தியா ஏன் உலகின் பலாத்கார தலைநகரமாக இருக்கிறது என்றும், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்பது இங்கு கிடையாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூட்டு பலாத்காரத்தை குறிப்பிடும் வகையில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோவை தற்போது தடை செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகளும், கண்டனங்களும் எழுந்து வருகிறது. இதை இந்திய அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆதங்கமாக இருக்கிறது. பெண்களை கொச்சைப்படுத்திய வீடியோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்