fbpx
Connect with us

இந்த 2 படங்களிலும் அம்மா கேரக்டரில் அம்சமாக செட்டான ஊர்வசி.. நடிப்பால் அசர வைத்து அசத்தல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த 2 படங்களிலும் அம்மா கேரக்டரில் அம்சமாக செட்டான ஊர்வசி.. நடிப்பால் அசர வைத்து அசத்தல்!

தமிழ் சினிமாவில் ‘முந்தானை முடிச்சு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஊர்வசி. அதன்பிறகு பல படங்களில் நடித்து தமிழ் மக்களிடமும் விமர்சகர்களிடமிருந்தும்  பாராட்டுகளைப் பெற்றார்.

இவ்வாறு பல்வேறு படங்களில் நடித்து ‘சகலகலாவல்லவி’ என்ற கௌரவத்துடன் தமிழ் சினிமாவில் கெத்தாக வலம் வந்தார்.

மேலும் ஊர்வசி சில காலங்களாக நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஊர்வசியின் நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டு படங்களுக்கும் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்துள்ளன.

அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ‘சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. அதில் ஊர்வசி சூர்யாவிற்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து நம்பர் பதினான்காம் தேதி வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் ஊர்வசி ஆர் ஜே பாலாஜி அம்மாவாக நடித்திருப்பார்.

இந்த இரண்டு படங்களிலும் அம்மா கேரக்டர் வேறு வேறு குணம் கொண்ட கதாபாத்திரம். அதாவது சூரரைப்போற்று படத்தில் எமோஷனல் மதர் ஆகவும், மூக்குத்தி அம்மன் படத்தில் காமெடி அம்மாவாகவும் நடித்து  கலக்கி இருக்கிறார் ஊர்வசி.

எனவே இரு வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் டக்கராக நடித்த ஊர்வசிக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருக்கின்றன.

Continue Reading
To Top