பிரபுதேவா

பிரபுதேவா சில வருடங்களாகவே ஹிந்தி சினிமாவை இயக்கும் வேலையை மட்டுமே செய்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தேவி படத்தின் மூலம் மீண்டும் நடிகர் அவதாரம் எடுத்தார். குலேபகாவலி படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து இவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி, விஜயின் லக்ஷ்மி மற்றும் யங் மங் சங் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது.

Akshay-Prabhu-deva

ஊமை விழிகள்

ஆபாவாணன் திரைக்கதையில் அர்விந்த்ராஜ் இயக்கிய ‘ஊமை விழிகள்’திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பெயரை வெள்ளித் திரையில் உறுதிபட எழுதியது. இப்படத்தில் கார்த்திக், ஜெய்ஷ்ங்கர், விஜயகாந்த், அருண் பாண்டியன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்தனர்.

oomai vizhigal

சூனியக்காரி தோற்றம் உடைய பாட்டி, காலால் தரையை தோண்டும் குதிரை, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வெங்கல மணியிலிருந்து வெளிப்படும் மணியோசை, இரட்டைக் குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியின் பயணம் என அனைத்துமே பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும் படம் தான் ஊமை விழிகள்.

oomai vizhikal prabhudeva mamta mohan das

இந்நிலையில் ஆகாஷ் சாம் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் புத்தி படத்திற்கு ஊமை விழிகள் என தலைப்பு வைத்துள்ளார்கள். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Mamta Mohandas

மம்தா மோகன்தாஸ்

இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் தமிழில் விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் நடித்தார். பின் குசேலன், குரு என ஆளு, தடையற தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நேற்று தொடங்கியுள்ளது.

பழைய படத்தின் தலைப்பு மற்றும் ஜானர் மட்டுமே ஒன்றாம். அப்படத்தின் தழுவலோ, ரீ – மேக்கோ கிடையாதாம் இந்த புதிய படம்.