நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம் என்று நடிகை கேத்தரின் தெரசா கூறியுள்ளார் அண்மையில், ஆர்யாவுடன் கேத்தரின் தெரசா நடித்து வெளியாகி உள்ள ‘கடம்பன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கேத்தரின் தெரசா பேசுகையில்,”ஆர்யாவுடன் நடித்தது நல்ல அனுபவம். ஆர்யா ஸ்வீட் பெர்சன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் உயிரை கொடுத்து வேலை செய்து இருக்கிறார்.

அடுத்து விஷ்ணுவுடன் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த பல நடிகர்கள் என்னை பாராட்டியிருக்கிறார்கள். பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் சில நெழிவு சுளிவுகளை சந்திக்க வேண்டும். ஆனால் அது யாரிடம் என்பது இங்கு முக்கியம்.”

மேலும் அவர், “நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம். கட்டுக் கோப்பாக இருந்தால் தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதனால்  தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன்.

மேலும், தற்போது இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை, பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

இது தவறு. பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். நான் துபாயில் வளர்ந்தவள்.

அந்த மாதிரி இங்கேயும் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.