இனி நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகளே இயங்கும்.. நிர்மலா சீதாராமன்

கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதால் இனி நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகளே இயங்கும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

27 பொதுத்துறை வங்கிகளில் இனி 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இயங்கும். வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.

வங்கி உயர் அதிகாரிகளின் ஊதிய உயர்வு குறித்து நிர்வாக குழுவே முடிவு எடுக்கும். வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். வங்கிகள் இணைப்பால் கடன் வழங்கும் திறன் அதிகரிக்கும் என்றார்.

Leave a Comment