அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாக வரிசை கட்டி நிற்கும் பிரபலங்களின் படங்கள்.. தியேட்டர் இழுத்து மூடும் சூழ்நிலை!

தமிழ் படங்கள் எப்போதுமே திரையரங்குகளில் தான் வெளியிடப்படும். கொரனா காரணமாக எந்த ஒரு நடிகரின் படத்தையும் திரையரங்கில் வெளியிட முடியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது அவர்கள் மேலும் கவலையில் ஆள்துவது போல் OTT  தளத்தின் மூலம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் கூட சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் திரையில் காண அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படக்குழுவினர் அமேசான் பிரைம் வீடியோ-வில் வெளியீட்டு ரசிகர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் பென்குயின், மிஸ் இந்தியா. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் OTT தளத்தில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களை பொறுத்தவரை எப்போதுமே திரையில் பார்ப்பதை தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் படக்குழுவினர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது பல படங்கள் OTT தளத்தின் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நெட்பிளிக்ஸ்

  • பூமிகா
  • நவரசா
  • பாவ கதைகள்

ஹாட்ஸ்டார்

  • ட்ரிப்பிள்ஸ்
  • லைவ்
  • பூமி
  • நவம்பர் ஸ்டோரி
  • மை பர்ஃபெக்ட் ஹஸ்பன்ட்

ஆகிய வெப் சீரியஸ்களை ஹாட்ஸ்டார் இல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் குட்டி லவ் ஸ்டோரி, விக்டிம், மாறா ஆகிய படங்களும் ஆன்-லைனில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ott-directors-movies-cinemapettai-1
ott-directors-movies-cinemapettai-1

முன்னணி நடிகர்களின் படங்கள் OTT தளத்தில் வெளிவருவதால் தியேட்டர்கள் மூடும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.