online food and fruits shopping
online food and fruits shopping

ருசிப்பிரியர்களை குஷி படுத்தவே தொடங்கப்பட்டுள்ளதுதான் நமது www.tredyfoods.comஎனும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர். உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை இந்த இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு.
சாத்தூரில் கரகர மொறுமொறு சேவு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, மணப்பாறையில் முறுக்கு, கோவில்பட்டியில் சுவையான கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம் என ஊரின் பெயரோடு தாங்கி தின்பண்டங்கள் விற்பனையாகின்றன .

திருநெல்வேலி அல்வா:

நீங்க எல்லாரும் இந்த திருநெல்வேலி அல்வா சாப்பிட்டு இருப்பீங்கன்னு நம்புறோம்.நல்ல தரமான சம்பா கோதுமையை எடுத்து, ஒரு 8 மணி நேரம் பதமா ஊறவைச்சு, பக்குவமா ஆட்டு உரல்ல போட்டு ஆட்டுனோமுன்னா, கோதுமைப்பால் பொங்கி வரும். அந்த கோதுமைப் பாலை வாணலியில் போட்டு கொதிக்க வைக்கணும், பின் சர்க்கரைப் போட்டு விடாம கிண்டிகிட்டே இருந்தால் அல்வா சிவப்பு நிறமா வரும், அப்போ தேவையான அளவு நெய் சேர்த்து கிளறி, வறுத்த முந்திரியை மழைச் சாரலா தூவி விட்டோம்னா, எலேய் திருநெல்வேலி அல்வா ரெடி லேய்!

tredyfoods
tredyfoods

முக்கனிகளில் முதல் கனி மா

“மாதா ஊட்டாத சோறை மாங்கனி ஊட்டும் என்றெல்லாம் பழமொழி உண்டு.”கோடைகாலம் வரும் முன்னே மாம்பழம் வரும் பின்னே என்பார்கள்…இதோ வெயில் தலை காட்டத் துவங்கிவிட்டது. மாம்பழ வாசனையும் வீசத் தொடங்கிவிட்டது. இப்போது சுவையான மாம்பழங்கள் www.tredyfoods.comமில் கிடைக்கிறது ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

tredyfoods
tredyfoods

மாம்பழம் என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது சேலம்.
கோடை காலத்தில் வெயிலை சமாளிக்கும் வகையில் மாம்பழங்கள் கிடைக்கின்றன என்றால் காரணம் இல்லாமல் இல்லை. மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  ஜாதகப்படி அஜீத் அரசியலுக்கு வருவார்: பிரபல இயக்குனர்

சேலம் பெங்களூரா மாம்பழம் அலாதியான சுவை கொண்டது. இதற்கு தோத்தாபூரி, கல்லாமை, சுந்தர்சா, கிளி மூக்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிடைக்கும் இந்த பழத்தின் காய்கள் சற்றுக் குறைந்த புளிப்புச் சுவை கொண்டதால் இதன் காயை கர்ப்பிணிகள் விரும்பி உண்பார்கள். சிறு குழந்தைகளுக்கு மாங்காய் ருசி பிடிக்கும். சேலம் பெங்களூரா பழங்கள் பெரியதாகவும், இளம் மஞ்சள் நிற சதைப்பற்றுக் கொண்டது. படிக்கும் போதே சுவைக்கத் தூண்டுதா? உடனே www.tredyfoods.comமில் ஆர்டர் பண்ணுங்க. வீடு தேடி மாம்பழம் வரும்.

ரெடி டு குக் மசாலா:

இன்றைய அவசர வாழ்க்கையில், உணவை சமைப்பதற்க்கு ஆகும் நேரத்தில் அதிக நேரம் அதற்க்கான மசாலாக்களை தயாரிக்கவே செலவாகும். வறுப்பது, தாளிப்பது, அறைப்பது போன்ற உங்கள் சமையலின் இத்யாதி இத்யாதி வேலைகளை சுலபமாக்க tredyfoods.com , ரெடி டு குக் மசாலாகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சமே வெங்காயம், தக்காளி, மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பட்டை, க்ராம்பு, சீரகம், மிளகு போன்ற தேவையான அனைத்து உட்பொருட்களும் சமையலுக்கு தயாரான நிலையில் (Readymade) , கலவையாக, சரியான விகத்தில் உள்ளது. பொடி போலில்லாமல் (Semi-Solid) திடதிரவமாக இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பேச்சிலர்கள், பணிக்கு செல்பவர்களின் சுமையை குறைக்கவேரெடி டு குக் மசாலாக்கள்www.tredyfoods.comல் விற்பனை செய்யப்படுகின்றன.

tredyfoods
tredyfoods

ரெடி டு குக் செட்டிநாடு மசாலா, ரெடி டு குக் பெப்பர் மசாலா, ரெடி டு குக் கடாய் மசாலா என சுவையான மசாலாக்களை வாங்கி சமைக்கலாம். சிக்கன், மட்டன், காளான், காலிஃப்ளவர், காய்கறிகளைக் கொண்டு விதம் விதமாக சமைக்கலாம்.

அதிகம் படித்தவை:  விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்கள் லிஸ்ட் இதோ

கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ்:

கம்பங்கூழ் கோடை வெயிலுக்கு இதமானது. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் கம்பங்கூழ் அருந்தலாம். கிச்சிலி சம்பா அரிசியில் இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. இரண்டையும் இணைத்து மிக்ஸ் ஆக www.tredyfoods.comமில் விற்பனை செய்கின்றனர். பாட்டியின் கைமணம் இந்த கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ்சில் கிடைக்கிறது.

tredyfoods
tredyfoodstredyfoods

இன்னும் கோடைக்கேற்ற சத்தான சுவையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை பானங்கள், கற்றாழை ஜூஸ், கறும்பு சாறு, பதநீர், பனங்கற்கண்டு, எலுமிச்சை கேன்டி, கிவி கேண்டி, ஆப்ரிகாட்,சீரகம், வெட்டிவேர், பனை வெல்லம், ஆர்கானிக் வெந்தையம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் * நொறுக்கு தீனிகள், * இனிப்புகள், * கேக் வகைகள், * ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ், * ஊறுகாய் வகைகள், * ஆர்கானிக் தின்பண்டங்கள், * அப்பளம், * பொடி வகைகள், * ரெடிமேட் சூப், * சட்னி வகைகள், * வீட்டில் தயாரிக்கப்பட்ட திண்பண்டங்கள், * மலைவாழைப்பழம், * தேன் வகைகள், * ஆட்டுக்கால் கிழங்கு என 800க்கும் மேற்பட்ட தின்பண்டங்கள் www.tredyfoods.comல் உள்ளது.
இந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு தங்கள் இல்லம் வந்தடைகிறது. CASH ON DELIVERY, இந்தியா முழுவதும் இலவச Shipping வசதி உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்.
ஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க… அப்புறம் நீங்களே www.tredyfoods.com பத்தி பெருமையா சொல்வீங்க…