பொறியியல் படிப்புகளில் சேர மே 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் , அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேர மாணவர்கள் , மே -1 முதல் 31ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.

மேலும், ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப்பட்டியல் ஜூன் 27 ம் தேதியும் வெளியிடப்படும் என்று கூறிய அமைச்சர் அன்பழகன், ஜூன் 27ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும், பொறியியல் படிப்பு சேர்க்கை தொடர்பான அறிக்கை ஏப்ரல் 30ம் தேதி, செய்தித்தாளில் வெளியிடப்படும் எனவும் கூறினார்.