Tamil Cinema News | சினிமா செய்திகள்
கண்கவரும் வடிவில் புதிய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொது ஒரு பதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ்,லவா ரெட் நிறத்தில் வருகிற ஜனவரி 26-ல் அறிமுகம் செய்யயுள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தொடக்கி நான்காவது ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில் சமீபத்திய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் லவா ரெட் வண்ண மாறுபாட்டை அறிமுகப்படுத்துகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள் 6.01-இன்ச் முழு ஏச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக், 2160x 1080 பிக்சல் இடம்பெற்றுள்ளது. இதன் டிஷ்பிளே 2.5டி வளைந்த டிஷ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது. அடுத்து 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது,
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயில் கேமரா மற்றும் செல்பீ கேமரா 16மெகாபிக்சல்,எல்இடி பிளாஷ் அம்சங்கள் கொண்டுள்ளது.இதில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி என இரண்டு வகையான உள்ளடக்க மெமரி மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3300 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, 4ஜி வோல்ட், , மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் பல ஸ்மார்ட்போன் வந்துள்ளது ஆனால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தனி இடத்தை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
