செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஒரு வழியா பாக்கியாவுக்கு விமோசனம் கிடைக்கப் போகுது.. விஜய் டிவி செய்யப் போகும் உருப்படியான விஷயம்

Bhakkiyalakshmi Serial: சீரியல், ரியாலிட்டி ஷோ, பொதுமக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு தகுதியான மேடை, போன்ற சில விஷயங்களை வைத்து மக்களின் பொழுதுபோக்கு சேனலாக விஜய் டிவி பல வருடங்களாக ஜொலித்துக் கொண்டு வந்தது. ஆனால் தற்போது யார் கண்ணு பட்டுச்சோ எல்லாம் தலைகீழாக மாறிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் சரிவை சந்தித்து வரும் வகையில் ரியாலிட்டி ஷோ மற்றும் சில சீரியல்கள் எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுவிட்டது.

அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் ஒரு காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து பெண்கள் மற்றும் ஆண்கள் என பார்த்து விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து அரைச்ச மாவை அரைக்கும் விதமாக கதையே இல்லாமல் உருட்டிக் கொண்டு வருவதால் மக்களுக்கு வெறுப்பாகிவிட்டது.

அதிலும் கோபி நடிப்பு வரவர வன்மத்தைக் காக்கும் அளவிற்கு ரொம்பவே சைக்கோ தனமாக இருப்பதால் இந்த நாடகத்தை பார்ப்பதை குறைத்து விட்டார்கள். அதிலும் அந்த நாடகத்துக்கு பில்லர் ஆக இருந்த ராமமூர்த்தியின் கதையை க்ளோஸ் பண்ணிவிட்டு அவருக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை நிஜத்தில் செய்வது போல் ஒன்று விடாமல் செய்து பார்ப்பவர்களை கண்கலங்க வைத்து விட்டது.

அந்த வகையில் விஜய் டிவி டிஆர்பிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போக தயங்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு நிரூபித்து விட்டார்கள். அப்படி இருந்தும் தற்போது கதை எதுவும் இல்லாததால் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து விட்டது. இதனால் விஜய் டிவி எடுத்த அதிரடியான முடிவு என்னவென்றால் இந்த நாடகத்தை இப்பொழுதே க்ளோஸ் பண்ணலாம் என்று சேனல் தரப்பில் இருந்து சொல்லி விட்டார்கள்.

ஆனால் தற்போது கோபி பக்கம் செழியன் மற்றும் இனியா சாய்ந்து விட்டார்கள். அடுத்ததாக எழிலை கவுக்கவும், பாக்யாவை பழிவாங்கவும் கோபி பிளான் போட்டிருக்கிறார். இந்த தருணத்தில் சீரியலை முடித்து விட சேனல் சொல்லியதால் அடுத்தடுத்து சில காட்சிகளை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக எல்லாம் பாக்யாவுக்கு பாசிட்டிவாக நடக்கப்போகிறது.

அந்த வகையில் கிளைமேக்ஸ் கிட்ட நெருங்கப் போவதால் பாக்யாவிற்கு கோபிடமிருந்து ஒரு வழியாக விமோசனம் கிடைக்கப் போகிறது. இதற்கு பதிலாக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வரும் தங்கமயில் சீரியலை ஒளிபரப்பு செய்யலாம் என விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

Trending News