செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஒரு வழியா முத்து மீனாவுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு.. அண்ணாமலை வேலை பார்க்கும் ஸ்கூலில் மகனை சேர்க்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி, பார்வதி வீட்டில் திருடிய பணத்தின் மூலம் முத்துவிடம் மாட்டிட கூடாது என்பதற்காக நகை எல்லாம் விற்று பார்வதி அத்தையிடம் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கிறார். கொடுத்துட்டு இந்த பணத்தை நான் சரியாக பார்க்காமல் காணவில்லை என்று சொல்லிவிட்டேன் என சொல்லி மீனாவின் மீது ஏற்பட்ட பழியை நீக்க வேண்டும் என்று நல்லவள் போல டிராமா பண்ணுகிறார்.

ரோகிணி பற்றிய விஷயம் எதுவும் தெரியாததால் பார்வதி அத்தையும் ரோகிணி போல் மருமகள் கிடைத்ததற்கு விஜயா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி அந்த பணத்தை வாங்கி விடுகிறார். அடுத்ததாக அண்ணாமலை அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முத்து வீட்டிற்கு வந்து நீங்க வேலைக்கு போவதற்கு யார் கேட்டு முடிவு எடுத்து இருக்கீங்க.

இவ்வளவு வருஷமா நீங்க வேலை பார்த்து எங்களுக்காக சம்பாதித்தது போதும். அதெல்லாம் வேலைக்கு போகக்கூடாது என்று கோபமாக சொல்கிறார். ஆனால் அண்ணாமலை சும்மா இருக்க போர் அடிக்கிறது அதனால் எனக்கு தெரிந்த ஏதாவது வேலை கிடைச்சா நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து நாங்க சம்பாதிக்கிறோம் அது போதும் நீங்க வீட்ல இருந்து ரெஸ்ட் எடுங்க என்று சொல்கிறார்.

அப்பொழுது விஜயா வந்து நீ என்ன லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறயா என்று குத்தி காட்டி பேசுகிறார். இந்த வீட்டில் என் பையன் மனோஜ் மட்டும் தான் கை நிறைய சம்பாதிக்கிறான் என்று பெருமையாக பேசுகிறார். இதை கேட்டதும் அப்படி என்றால் அப்பாவிடம் இருந்து எடுத்துட்டு போன பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லு என வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ரோகினி வீட்டிற்கு வந்து மனோஜிடம் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து அத்தையிடம் கொடுத்துவிடு என்று சொல்கிறார். உடனே மனோஜ் உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்கும் போது ரோகிணி என்னுடைய தாலிச் செயின் மற்றும் மத்த செயினையும் விற்று விட்டேன். முதல்ல அத்தையிடம் இந்த பணத்தை கொடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார்.

அதன்படி மனோஜ் பணத்தை எடுத்துட்டு வந்து அம்மா இது உங்களுக்காக மூன்று லட்ச ரூபாய் பணம் என்று கொடுக்கிறார். இதை முத்துவிடம் கொடுத்து உங்கள் மீது இருக்கும் பிரச்சனையை சரி செய்யுங்கள் என்று சொல்கிறார். உடனே விஜயா, அதை முத்துவிடம் கொடு இனி யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்று தெனாவட்டாக பதில் சொல்கிறார்.

அந்த நேரத்தில் பார்வதி, விஜயாவுக்கு போன் பண்ணி பணம் கிடைத்துவிட்டது என்ற தகவலை சொல்கிறார். இதை கேட்டதும் அண்ணாமலை, பணத்தை சரியாக தேடி பார்க்காமல் மீனா மீது பழி போட்டது தப்பு, மன்னிப்பு கேளு என்று சொல்கிறார். அதற்கு நான் ஒன்னும் சொல்லவில்லை பார்வதிக்கு அப்படி ஒரு சந்தேகம் அதைத்தான் நான் சொன்னேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதை கேட்டதும் அண்ணாமலை, ரோகினிடம் தப்பா நினைச்சுக்காதே ஒரு உதாரணத்துக்கு உன்னை சொல்கிறேன் என்று சொல்கிறார். அதாவது பார்வதி வீட்டிற்கு மீனா வந்தது போல் ரோகிணி தான் உனக்கு சாப்பாடு கொண்டு வந்ததாக சொன்னாய். அப்படி இருக்கும் பொழுது பணம் திருட்டு போன பொழுது உனக்கு ரோகிணி மீது சந்தேகம் வரவில்லை. மீனா மீது மட்டும் எப்படி சந்தேகம் வந்தது.

அவ இல்லாத பொண்ணு குடும்ப கஷ்டப்படுகிறது என்ற ஒரு காரணத்துக்காக நீ என்ன வேணாலும் பேச முடியுமா? இப்பொழுது கூட அவள் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்தும் உன்னை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. இதுவே சுருதி மற்றும் ரோகிணியாக இருந்தால் உன்னை சும்மா வைத்திருப்பார்களா? இப்பவாவது மீனாவின் மனசை புரிந்து கொள் என்று அட்வைஸ் பண்ணி போகிறார்.

இதனை அடுத்து அண்ணாமலை ஸ்கூலில் வேலை பார்ப்பதற்கு சேர்ந்து விட்டார். ஆனால் அதே ஸ்கூலுக்கு தான் ரோகினி, க்ரிஷை கூட்டிட்டு வந்து சேர்த்து விடுகிறார். அந்த வகையில் க்ரிஷ் அங்கே படிக்கும் விஷயம் அண்ணாமலைக்கு தெரிந்து விடும். இதன் மூலம் நிச்சயம் ரோகினி பற்றிய ரகசியங்கள் முதலில் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அடுத்தபடியாக அண்ணாமலை இந்த விஷயத்தை முத்துவிடம் கூற போகிறார். எது எப்படியோ இப்போதைக்கு முத்து மற்றும் மீனாவுக்கு பண பிரச்சனையிலிருந்து ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது.

- Advertisement -

Trending News