தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் வரிசையில் பல ஆண்டுகளாய் பட்டியலில் நீடித்திருப்பவர் A.R.முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளிவரும் பட்டங்கள் அனைத்திற்கும் வசூல் மினிமம் கேரண்டி உண்டு.

கமர்சியலோடு சமூக கருத்தை சொல்லும் ஷங்கர் போன்ற இயக்குனரின் பாதியில் முருகதாஸ் பயணித்தாலும் பிரம்மாண்டத்திற்காக தயாரிப்பாளர் தலையில் கைவைக்காதவர். இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வசூல் மழையை பொழிந்திருந்தாலும் படதிர்காங்க தயாரிப்பு செலவு மிகவும் குறைவே.

இப்படி தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளையான முருகதாஸ் தற்போது தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கிகொண்டிருக்கும் படத்தை பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்த விடயங்கள்
1. இது ஒரு அறிவியல் Fantacy படம் போல் தெரிகிறதே என்ற கேள்விக்கு “படத்தை நேரில் பார்த்து முடிவு செய்யுங்கள், அதுவரை உங்களது கற்பனைக்கு நான் தடையிடமாட்டேன் என்றார்.”

ARMurugadoss-MaheshBabu2. படத்தை பற்றி கேட்ட போது “இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நம் S.J.சூர்யா நடிக்கிறார். S.J. சூர்யா மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல மிகச்சிறந்த நடிகரும் கூட, அவரை இயக்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி”

3. 1படத்தை பற்றிய எதாவது சுவாரஸ்ய விஷயம் பற்றி கேட்டதற்கு “இந்த படத்தில் ஒரு காட்சி வரும் அது 8 நிமிடங்கள் மகேஷ் பாபுவிற்கும் S.J.சூர்யாவிற்கும் இடையே நிகழும் காட்சி. இந்த 8 நிமிட காட்சிக்கு பல கோடி ரூபாய் செலவானது, ஆனால் தயாரிப்பாளர் காட்சி நன்றாக வந்தால் போதும் செலவு பற்றி கவலை இல்லை என்று பெருமிதமாக கூறினார். அந்த காட்சி நல்ல வரவேற்ப்பை பெரும் என்று நம்புகிறேன்”

இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தெலுங்கு ரசிகர்கள் போலவே தமிழ் ரசிகர்களுக்கும் அதிகம் உள்ளது.

தமிழில் வெளியான நியூ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் S.J.சூர்யாவின் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

spyder teaserசினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அதே நியூ தெலுங்கு ரீமேக்ல கிரண்க்கு பதிலா நடிச்சது நம்ம ராஜமாதா சிவகாமி தேவிதாங்க.