இந்தியாவை பொறுத்தவரை ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தனக்கென்ற மார்க்கெட்டை பிடித்துள்ளது ஒன் பிளஸ். கடந்த 2013 இல் துவங்கப்பட்ட நிறுவனம். NEVER SETTLE என்ற டேக் லயனுடன் தரமான போன்களை வழங்கி வருகின்றனர்.
ஒன் பிளஸ் நிறுவனத்தின் அதிகபட்ச ஷேர் ஒப்போ (OPPO) வசம் தான் உள்ளது. ஒன் பிளஸ் போனின் பல உதறி பாகங்களை உற்பத்தி கூட ஒப்போவின் தொழிற்சாலையில் தான் செய்கின்றனர்.
தற்பொழுது மார்க்கெட்டில் 7 டி 35000 ரூபாய்க்கும், 8 சீரிஸ் போன்கள் 45000 என்ற ஆரம்ப விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் பட்ஜெட் போன் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தப்போவதாக பல நாட்களாக சொல்லப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே ஒன் பிளஸ் எக்ஸ் என்ற மாடலை 2015 இல் வெளியிட்டனர். அதன் பின் குறைந்த விலை போன்கள் பக்கம் நிறுவனம் செல்லவில்லை.

ONE PLUS NORD – ஒன் பிளஸ் Z அல்லது lite என புதிய போன் பற்றி சொல்லி வந்தனர். இந்நிலையில் போனின் பெயர் நோர்ட் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. இந்த போனில் இரண்டு பிரண்ட் காமெரா இருப்பது உறுதியாகி உள்ளது.
(dual 32 MP + 8 MP cameras at the front, with primary 32MP lens joined by an 8 MP wide angle model) 32 மெகா பிக்சல் முதன்மை காமெராவும், 8 மெகா பிக்சலில் இரண்டாவது ஷூட்டர் உடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரியல் மீ x 3 , ஹுவாயி P40 யில் உள்ளது போல ஸ்க்ரீன் உள்ளே பஞ்ச் டிசைன் (top left corner in screen) ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த போன் மாடல் ஸ்னாப் டிராகன் 765G சிப்செட் கொண்டது. 90Hz அமோலட் டிஸ்பிலே கொண்டது. 12 ஜிபி ரேம், 6.4 இன்ச் ஸ்க்ரீன், 4000 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 10 என செல்கிறது இதன் சிறப்பம்சம். ஜூலை 10 அன்று இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இந்த மாடல் வெளியாகும் என்கின்றனர். இந்தியா மதிப்பில் 25000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
யோவ் ஐந்தாயிரம், ஏழாயிரம் என்றால் பட்ஜெட் போன் என்ற கணக்கில் எடுத்துக்கலாம், இது போய் பட்ஜெட் போனா என உங்களில் சிலர் கேட்பது புரிகிறது. எனினும் இத்தனை சிறப்பம்சங்களை அடக்கிய போனுக்கு பட்ஜெட் விலை என சொல்வது தவறில்லை என்றே தோன்றுகிறது நமக்கு. உங்கள் கருத்தை கமெண்டில் தட்டுங்க..