Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று விவகாரத்திற்கு ஆதரவு தந்த ஒரே ஒரு மூத்த நடிகர்.. அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய பிரபலம்

சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று படத்தைப் பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக உள்ளது. சூரரைப் போற்று படத்தை சூர்யா தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியிட்டது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. சம்மர் வெளியீடாக வெளிவர இருந்த இந்த படம் தற்போது உள்ள சூழ்நிலை காரணமாக தள்ளிச் சென்றது.

bharathi-raja-statement

bharathi-raja-statement

ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். படம் வெளியாக நீண்ட நாட்களாகும் என தெரிந்து தற்போது அந்த படத்தை அமேசான் தளத்திற்கு விட்டுவிட்டார்.

bharathi-raja-statement-01

bharathi-raja-statement

தியேட்டர் ஓனர்கள் இடையே இந்த தகவல் புகைச்சலை கிளப்பியுள்ளது. யாருடைய உழைப்பும் வீணாக கூடாது என்பதற்காகத்தான் அமேசான் தளத்திற்கு விற்றதாகவும் அடுத்தடுத்த படங்களை கண்டிப்பாக தியேட்டரில் தான் வெளியிடுவேன் என்பதையும் கூறியிருந்தார்.

bharathi-raja-statement-02

bharathi-raja-statement

ஆனால் அதையெல்லாம் மதிக்காமல் தியேட்டர் ஓனர்கள் சூர்யா அவர்களுக்கு துரோகம் செய்வதை போல தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். அதனை பார்த்த பாரதிராஜா, அதற்கான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

bharathi-raja-statement-03

bharathi-raja-statement

அதில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நம் குடும்பத்தில் ஒருவர் தான் என்பதையும் பொருட்படுத்தாமல் பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார். அனைவரும் சூர்யா செய்தது தவறு என கூறிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிராஜா நடப்பு தயாரிப்பு சங்க தலைவராக இருந்து இந்த அறிக்கையை வெளியிட்டது அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.

இதேபோல்தான் மீராமிதுன் பிரச்சனையிலும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

Continue Reading
To Top