விருதுகளை வாரி குவிக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா.. இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடி தான் என்ற படத்தை இயக்கி மிகுந்த பாராட்டுக்களை பெற்றார்.

இப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. தற்போது அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா வரிசையில் நயன் – விக்கி இருவரும் அனைவரும் ரசிக்கும் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் முலம் படங்களை தயாரித்து வருகிறார். விக்னேஷ் சிவன் மட்டுமின்றி அவரது காதலியும், நடிகையுமான நயன்தாராவும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் மூலம் படங்களை தயாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் தயாரித்த கூழாங்கல் என்ற படம் ரோட்டார்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு சிறந்த படத்திற்கான டைகர் விருதை பெற்றுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர்.

nayanthara
nayanthara

தற்போது விக்கி – நயன் அந்த விருதை சந்தோஷமாக கட்டி அனைத்தப்படி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் அதில் நாங்கள் வாங்கிய முதல் சர்வதேச விருது இதுதான் என்று கூறியுள்ளனர்.

Next Story

- Advertisement -