மேலும் ஒரு விருதை வாங்கி தந்த தனி ஒருவன் ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

மேலும் ஒரு விருதை வாங்கி தந்த தனி ஒருவன் !

News | செய்திகள்

மேலும் ஒரு விருதை வாங்கி தந்த தனி ஒருவன் !

mohan-rajaபழம்பெரும் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் பெயரில் ஆண்டு தோறும் சிறந்த வெற்றிப்பட இயக்குனருக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.

2015ம் ஆண்டில் சிறந்த வெற்றிப் படமாக தனி ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் இயக்குனர் மோகன்ராஜாவுக்கு நாகி ரெட்டி விருது வழங்கப்பட்டது. படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது. படத்தில் நடித்த ஜெயம்ரவி உள்ளிட்ட கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.

விஜயா ஹாலில் நடந்த எளிய விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த விருதுகளை வழங்கினார். தமிழறிஞர் அவ்வை சண்முகம், நல்லி குப்புசாமி செட்டி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top