கோலிவுட்டில் முதல்முறையாக மில்லியன் பாடகர்கள் இணைந்து பாடி இருக்கும் பாடல் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தை கபாலி படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்குகிறார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, அரவிந்த் ஆகாஷ், வத்திக்குச்சி திலீபன், ஹீமா குரோஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

படத்தை முதலில் ஏப்ரல் 27ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்க போராட்டத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது. இதனையடுத்து, படம் ரம்ஜானுக்கு முந்தைய வாரமான ஜூன் 7ல் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 7ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் என கிசுகிசுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களையும், ஏழைகளையும் உயர்வாகப் புகழும் விதமான பாடல்கள் நிச்சயம் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு 10 லட்சம் பேர் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவீட்டி இருக்கிறார். தொடர்ந்து, இது தனது பல நாள் கனவு என்றும், விரைவில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

Kaala Audio Launch on May 9

முன்னதாக, ரஜினிக்கு கபாலி படத்திற்காக நெருப்புடா பாடலை கொடுத்தவர் அருண்ராஜ் காமராஜ். அவரின் வாய்ஸில் பாடல் பட்டி தொட்டி எங்கும் தெறிக்கவிட்டது. இந்த கூட்டணியை தக்க வைக்க சந்தோஷ் நாராயணன், காலா படத்தில் செம்ம வெயிட்டுடா பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.