வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரு லட்சம் சம்பளம்னு சொல்லி எவளோ கொடுத்தாங்க தெரியுமா? இதெல்லாம் ரொம்ப பாவம் பாலா

2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த நான் கடவுள் திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனக்கு ஒரு லட்சம் தருவதாக நடிக்க வைத்து, தற்போது வரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது நான் கடவுள் படத்தில் சாமியாராக மாற்றுத்திறனாளி கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். இவர் இயற்கையிலேயே உருவத்தில் குள்ளமாகவும் இரண்டு கைகள் இல்லாமல் இருந்ததால், இவரை செய்தித்தாளில் பார்த்த நான் கடவுள் படக்குழுவினர் இவரை அணுகி உள்ளனர்.

சினிமாவில் நடிப்பதில் கிருஷ்ணமூர்த்திக்கு துளிகூட விருப்பம் இல்லாதபோது, அவருடைய குடும்பத்தினர் சம்மதித்ததால் நான் கடவுள் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் அதை ஏற்று நடிக்கவில்லை.

ஏனென்றால் சினிமாவின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சூட்டிங் என்று பலமுறை அவரை அழைத்து சென்ற பிறகு சூட்டிங் இல்லை என திருப்பி அனுப்பி விடுவதால், நிறைய நாட்கள் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

இதனால் அவருடைய வேலையும் கெட்டுப் போனதாம். ஆகையால் சினிமா என்றாலே ஏமாற்று வேலைதான் என தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். நான் கடவுள் படத்திற்குப் பிறகு கிருஷ்ணமூர்த்தி நல்ல நிலைக்கு வருவார் என அவருடைய குடும்பம் எதிர்பார்த்தார்கள் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

இருப்பினும் கிருஷ்ணமூர்த்தி பல கச்சேரிகளில் சிறுவயதிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் தேசிய விருது, கலைமாமணி விருது பல விருதுகளை வாங்கி கொடுத்திருக்கிறாராம். ஒரு வயதான மாற்றுத்திறனாளிக்கு சம்பளம் கொடுக்காமல் நான் கடவுள் இயக்குனர்  பாலா ஏமாற்றி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகப் பேசப்படுகிறது.

nan-katavel
naan-kadavu-actor-cinemapettai
- Advertisement -

Trending News