இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் எளிதாக வென்ற இந்திய அணி தொடை வென்று அசத்தியது. தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஒரு டி20 போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ரஹானே, கெதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்த யுவராஜ், அஸ்வின், ஜடேஜா, ஷமி, மேஷ்யாதவ், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இடம்பெறவில்லை.