fbpx
Connect with us

Cinemapettai

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்.. இனி இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம்

India | இந்தியா

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்.. இனி இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம்

இனிமேல் தமிழக மக்களுக்கு கவலை இல்லை எந்த ஒரு கடையிலும் அரசின் மானிய பொருட்களை வாங்கலாம். ஆனால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே.

மாநிலம் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நியாயவிலைக் கடைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய உணவுத் துறை மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

நாட்டின் எந்த பகுதியிலும் வசிக்கும் மக்கள் எந்த ஒரு நியாயவிலை கடையிலும் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் இதற்குப் பெயர் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் என அழைக்கப்படும் எனக் கூறினார்.

தற்போது ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருவதாகவும் வெற்றி அடைந்துவிட்டால் அனைத்து இடத்திலும் இந்தத் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார். பணியின் காரணமாக சொந்த மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்வார்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என தெரிவித்தார்.

ஒருவர் கூட மானிய பொருட்களை வாங்க முடியாத நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதற்கு பலரும் திட்டம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே ஆதார் கார்டு பிரச்சனை வந்தது. அதேபோல் நாட்டில் உள்ள எல்லோரிடமும் ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் கார்டில் குளறுபடி ஏற்பட்டால் அது பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top