ஆஸ்கர் நாமினேசனில் பிரம்மாண்ட படங்களை தும்சம் செய்த ஒரே இந்திய படம்.. மிரளும் ஹாலிவுட்!

உலகில் இருக்கும் அத்தனை திரைத்துறையினர் மத்தியிலும் இருக்கும் ஒரு ஏக்கம் இந்த ஆஸ்கார் விருதினை ஒரு முறையாவது கையில் ஏந்தி விட மாட்டோமா என்பதுதான். உலக அரங்கில் கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பதால் இதன் மீது இருக்கும் மதிப்பு பெரியதாக உள்ளது. ஆனால் இந்திய அளவில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை. ஹாலிவுட்டில் மட்டும் விஜய் டிவியில் கொடுக்கும் விஜய் அவார்ட்ஸ் போல தொடர்ந்து வாங்கி கொண்டே இருக்கின்றனர்.

அப்படி இருக்கும் போது, நம் இந்தியாவில் இருந்து ஏதாவது ஒரு படைப்பு உலக அரங்கில் ஒலிக்காதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.இந்த 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாப் 15 படங்களில் இந்தியாவின் ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ என்ற ஆவணப்படம் ஏற்கனவே இடம் பிடித்து இருந்தது.

அமெரிக்காவின் ஹாலிவுட் சிட்டியான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இறுதிப்பட்டியலுக்கு படங்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் தமிழில் வெளியான ஆவணப்படமான கூழாங்கல் படம் தேர்வாகும் வரிசையில் டாப் 15 படங்கள் என்ற இடத்தில் இருந்து பின்னர் இந்த படம் அதில் இருந்து வெளியே வந்தது. இதே போல ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கரின் இறுதி பட்டியல் வரை சென்று கடைசியில் தேர்வாகவில்லை. இருந்தும் ஆஸ்கரின் யூடியூப் தளத்திலும் வெளிநாட்டு திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்ததும் ஜெய் பீமிற்கு பெருமை கொள்ளும் ஆறுதலான விஷயம்.

இந்த நேரத்தில் இந்தியில் வெளியான ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ ஆஸ்கரின் நாமினேசன் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது. 92 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இடம் பெற்றுள்ள இந்த போட்டியில், இந்தியாவின் ஆவணப்படமான ‘ரைட்டிங் வித் ஃபயர்’ திரைப்படம் இடம் பெற்றது உண்மையில் பெருமை கொள்ள கூடிய ஒரு விடயம். இது தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்று அசத்தி இருக்கிறது. அதாவது ஆஸ்கரின் இறுதி தேர்வில் இந்த படம் முன்னேறி இருக்கிறது.

இந்தி திரைப்பட இயக்குனர்களான ரிந்து தாமஸ், சுஷ்மித் கோஷ் ஆகியோர் தயாரித்து இயக்கிய படம் தான் இந்த ரைட்டிங் வித் ஃபயர். தலித் பெண்ணின் வாழ்வியலை பற்றிய இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசுபட்டது. ஆசிய அளவில் கிட்டத்தட்ட 26-க்கும் மேல் விருதுகளையும் அறுவடை செய்து இருக்கிறது. இப்போது இந்தப்படம் ஆஸ்கர் விருது நாமினேசனில் இடம் பிடித்து இருப்பது இந்திய திரையுலகம் பெருமிதம் கொள்ளும் விதமாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்