fbpx
Connect with us

ரஜினி அரசியலுக்கு வரணுமா வேணாமா? விஜய் பேசிய பேச்சி.. இப்பொழுது வைரலாகும் வீடியோ

rajini-vijay

Videos | வீடியோக்கள்

ரஜினி அரசியலுக்கு வரணுமா வேணாமா? விஜய் பேசிய பேச்சி.. இப்பொழுது வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படமும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் வெளியீடுகளில் கொரானாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வர்த்தக ரீதியாக சினிமாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சினிமா சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

என்னதான் தளபதி விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் வசூல் மன்னனாக இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நம்பர்-1 இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை தற்போது வரை நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த். இன்றும் ரஜினியின் படங்கள் மற்ற நடிகர்களின் படங்களுக்கு சவால் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருக்கும் ரஜினிதான் ரோல் மாடல் என்று அவர்களே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக ரஜினியின் அரசியல் குறித்து தான் தமிழ் சினிமாவில் பேச்சுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அரசியலில் ஒரு நிலைப்பாடு இல்லாமல் சமீப காலமாக ரஜினி பேசி வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் 1996 இல் ரஜினி அரசியலுக்கு களமிறங்கியிருந்தால் இன்று நிரந்தர முதலமைச்சராக பணியாற்றுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படி ஒரு பேட்டியில் தளபதி விஜய் ரஜினியை பற்றி, ரஜினியை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் அரசியலுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. ரஜினி, விஜய் ஆகியோர் இடையே கடும் போட்டி என கூறிக் கொண்டிருந்தவர்கள் இந்த வீடியோவை பார்த்து தற்போது கப்சிப்பென்று இருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top