Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan-sushant-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று சுஷாந்த்க்கு நடந்தது அன்று சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது.. ஆனா எப்படியோ தப்பித்து விட்டார்!

தற்போது நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்(Sushant Singh Rajput) தற்கொலை செய்து கொண்டது தான். அதுவும் பல வாரிசு நடிகர்கள் சேர்ந்து அவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இவ்வாறு செய்து விட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வாரிசு என்பது அரசியலில் மட்டும் கிடையாது, சினிமாவிலும் அதனுடைய தாக்கம் அதிகம். அதன் வெளிப்பாடுதான் சுஷாந்த் சிங் தூக்கு போட்டு இறந்தது. இதேபோன்று மன அழுத்தத்தை தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகருக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் டிவியிலிருந்து பிரபலமாகி தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன்(sivakarthikeyan). குடும்ப ரசிகர்களின் ஆதரவை இவருடைய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன.

ரெமோ படத்திற்கு பிறகு தான் இவருடைய மார்க்கெட் மிகப்பெரிய அளவுக்கு உயர்ந்தது. ஆனால் அந்த படத்தை வெளியிட எவ்வளவு சதி செய்ய முடியுமோ அவ்வளவு சதி செய்துள்ளார்கள் திரைத்துறையைச் சேர்ந்த பல வாரிசு அமைப்புகள்.

அதற்காக ஒரு முறை அவர் மேடையில் அழுதது கூட இன்னும் ரசிகர்கள் மத்தியில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று பாலிவுட் நடிகர் மன அழுத்தம் காரணமாக இறந்ததை பார்த்து சிவகார்த்திகேயன் அன்று அழுததற்கு தற்போது ஆதரவு பெருகி வருகிறது.

சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் வளர வேண்டும் எனவும், புதிதாக யார் வந்தாலும் அவர்களை அசைத்துப் பார்ப்பது தான் அவர்களுக்கு வேலை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

Continue Reading
To Top