Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி.. இந்த வாட்டி என்ன ஆகப்போகுதோ?
தளபதி விஜய் மற்றும் கார்த்தி ஆகிய இருவரிடமும் மீண்டும் ஒரே தேதியில் மோதிக்கொள்வது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக அறிமுகமானவர்கள் தான். ஆனால் கார்த்தியை விட விஜய் கொஞ்சம் சீனியர்.
அதுமட்டுமல்லாமல் கார்த்தியை விட வியாபாரங்களில் பல மடங்கு உயர்ந்தவர் விஜய். ஆனால் அப்படிப்பட்ட விஜய்யை கைதி என்ற படத்தின் மூலம் ஆட்டிவைத்தார் கார்த்தி.
கைதி மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பின. பிகில் படத்தைவிட கைதி படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

master-vijay-cinemapettai
இந்நிலையில் 2021 பொங்கலுக்கு மீண்டும் விஜய் நடித்த மாஸ்டர் படமும் கார்த்தி நடித்த சுல்தான் படமும் ஒரே தேதியில் வெளியாக உள்ளதாம்.

sultan-karthi-cinemapettai
ஏற்கனவே கார்த்தியுடன் மோதிய விஜய் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதால் இந்த முறை என்ன ஆகப்போகிறதோ என கவலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
சிறுத்தை-காவலன் போட்டியில் சிறுத்தை படமும், பிகில்-கைதி படங்களில் விமர்சனரீதியாகவும் லாபகரமாகவும் கைதி படம் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
