தேவி படத்தைப்போல் மீண்டும் ஒரு ஹாரர் படத்தை லைகா தயாரிப்பில் இயக்குனர் விஜய் எடுக்கவுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ஹாரர் படம் ‘தேவி. இந்தப் படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய்யின் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகி வருகிறது ‘வனமகன். ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாயீஷா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. வனமகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  தளபதியின் சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இவை தான்.

இப்படத்தை அடுத்து இயக்குனர் விஜய், துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் உருவான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கை மாதவன், சாய்பல்லவியை வைத்து இயக்க இருந்தார். இதற்கிடையில், ‘சார்லி’படத்துக்கு முன்பு குறுகிய கால பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். நாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஹாரர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரே ஷெட்யூலில் 30 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய்.