Tamil Nadu | தமிழ் நாடு
காந்தி ஜெயந்தியன்று நெசவாளர்களின் உழைப்பிற்கு புத்துயிர் அளித்த எடப்பாடியார்! பொதுமக்களிடமிருந்து குவியும் பாராட்டுக்கள்!
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் ஆட்சியை செவ்வனே நடத்தும் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற, தமிழக மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
கிராமப்புறங்களில் உள்ள நூட்போர் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 51 கதர் அங்காடிகள் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
மேலும் கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்க தமிழக அரசு அனைத்து கதர் பொருட்களுக்கும் 30% தள்ளுபடியை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
கதர் நூட்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக நூட்பாளர் மற்றும் நெசவாளர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வு ஊதியம் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது எடப்பாடியார் அரசு.
எனவே, தேசபற்றினையும் இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிக்க கூடிய கதர் ஆடைகளை அனைத்து தரப்பினரும் உடுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை இன்றைய தினத்தில் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ளார் எடப்பாடியார்.

gandhi-jayanthi
இவருடைய இந்த அறிவிப்பு நெசவாளர்களின் மனதில் ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்த செய்தி பொதுமக்களின் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
