‘தப்பு தண்டா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சத்யமூர்த்தி. இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “க்ளாப் போர்ட்” சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் என்பவர் இயக்கி வருகிறார்.

முக்கிய வேடங்களில் ‘எருமை சாணி’ விஜய், ஹரிஜா , ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ கோபி – சுதாகர், ஷாரா, அகஸ்டின் முக்கியவேடங்களில் நடித்துள்ளனர். கௌசிக் கிரீஸ் இசை. ஜோஸ்வா ஒளிப்பதிவு.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. இந்த சமயத்தில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.