சென்னை: ஒல்லி இயக்குனர் புதிதாக ஆக்ஷன் நடிகருக்கு அடிபோடுகிறாராம்.

இயக்க வந்த வேகத்தில் பிரமாண்ட இயக்குனருக்கு நிகராக சம்பளம் கேட்டு அடம்பிடிக்கும் ஒல்லி இயக்குனர் தற்போது தளபதி படத்தில் பிசியாக உள்ளார்.

ஒல்லி செய்யும் அலப்பறைகளால் தளபதி ஏற்கனவே அவர் மீது கடுப்பில் உள்ளார். இருப்பினும் கடுப்பை மறைத்துக் கொண்டு வேலை பார்த்து வருகிறார். படம் எடுத்தால் தல, தளபதியை வைத்து தான் என்ற ஒரு மாபெரும் கொள்கையை வைத்துள்ளார் ஒல்லி.

அதன் அடிப்படையில் தான் மீண்டும் தளபதியை இயக்கி வருகிறார். ஒல்லி தலை கீழாக நின்றாலும் தல கால்ஷீட் தருவதாக இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்நிலையில் ஆக்ஷன் நடிகரை பாராட்டி அவரை இயக்க அடிபோடுகிறாராம்.