அஜித்தின் புகழ்பெற்ற திரைப்பட பெயர் சிவா. இப்பெயர் காதல் மன்னன், வாலி, வில்லன், பரமசிவன், ஆழ்வார், ஏகன், அசல் என 7 திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.

Ajith

அஜித்தின் 50ஆவது திரைப்படமான மங்காத்தா இவருக்கு பெரிய அடையாளத்தைத் தந்தது. அதோடு 2012-இன் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

தல படமான ஆரம்பம், 10 நாட்களில் 1 பில்லியன் வசூலித்து அதிக லாபம் பெற்ற படமாக அமைந்தது.நடிகராக ஆகுவதற்கு முன் மெக்கானிக் ஆக வேலைச் செய்தவர் அஜித். அதனால் தான் இவருக்கு வாகனங்கள் மீது அதிக ஈர்ப்பு.

ajith vivegam
ajith vivegam

அஜித் நடித்த முதல் படம் வெளியாகவில்லை காரணம் படப்பிடிப்பின் போது அதன் இயக்குனர் இறந்துவிட்டார்.அஜித் பயிற்சி பெற்ற விமானியும் கூட. இவர் போர் விமானத்தை இயக்கும் தகுதியுடையவர்.

தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்விக்கு பிறருக்கு தெரியாமல் உதவி வருகிறார் அஜித். அதோடு, தொழிலாளர்களுக்கு பண உதவியும் செய்து வருகிறார்.

red-ajith

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது ரசிகர்களாக இருப்பார்கள்.

அஜித்துக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் நடிகர் அஜித்துக்கு ஆதரவாகப் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

ajith

இந்த வீடியோவில் வயதான பெண்மணி, அஜித் அன்னதானம், ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் எனப் பல உதவிகள் செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.

அஜித்தை பற்றி தவறாகப் பேசினால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்தப் பெண்மணி சென்னை வட்டார மொழியில் கோபமாக பேசிவிட்டுச் செல்லும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், பலருக்கும் இதுபோல் உதவி செய்வதாக அவ்வப்போது செய்திகள் வருமென்பதும் குறிப்பிடத்தக்கது.