Tamil Nadu | தமிழ் நாடு
இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது.. வச்சிட்டாங்க ஆப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி
தற்போதைய வாழ்வியல் நிலையில் வாட்ஸ்அப் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் மக்கள் பயணித்து வருகின்றனர். அப்பேர்ப்பட்ட வாட்ஸ் அப்பை இனி பயன்படுத்த முடியாது என்கிற செய்தியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்ததில் இருந்து மக்கள் பைத்தியம் பிடித்ததுபோல் சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சில மொபைல்களில் மட்டும் வாட்ஸ்அப் சேவை இருக்காது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட காலமாக தனது மொபைல்களில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் IOS 8 போன்ற வகையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் ஐ அப்டேட் செய்யாத பயனாளர்களுக்கு பிப்ரவரி 1, 2020 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் சேவை இருக்காது.
ஆன்ட்ராய்டு 2.3.7 இயங்குதளம் மற்றும் IOS 8 இயங்குதளம் போன்றவற்றில் தற்போது வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் தனது இயங்குதளங்களை அப்டேட் செய்யாத அதாவது அடுத்த நிலை வெர்சன்களுக்கு மாற்றிக் கொள்ளாத பயனாளர்களுக்கு இனி வாட்ஸ்அப் சேவை தொடராது என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சோணமுத்தா.. போச்சா
