sakka podu podu raja santhanam-vivek-movie

தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் எம்ஜிஆராகவோ, சிவாஜியாகவோ, ரஜினியாகவோ, கமல்ஹாசனாகவோ ஆக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பேராசையாக இருக்கும். அப்படி ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு ரசிகர்களின் பேராதரவு இருக்கும். அவர்களது படங்களின் பெயரைப் பயன்படுத்தினாலோ, அவர்களது பாடல் வரிகளைப் பயன்படுத்தினாலோ அவர்களது இடத்தை அடைந்து விடலாம் என்பது நடக்காத ஒரு ஆசை.

நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர் சந்தானம். ஆசை யாரை விட்டது, அவருக்கும் நாயகனாக ஆக வேண்டும் என்று ஆசை. அவருடன் டிவியில் சம காலத்தில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாக உயரும் போது சந்தானம் சும்மா இருப்பாரா. இனி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன், நாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என சபதம் எடுத்தார் சந்தானம். ஆனாலும், விதி வலியது. நாம் நினைப்பது எதுவும் அவ்வளவு சுலபத்தில் நடக்காதே. அவர் நாயகனாக நடித்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

அதிகம் படித்தவை:  மரண கலாய் மறுபடியும் களமிறங்கிய சந்தானம்! தில்லுக்கு துட்டு 2 டீசர்!

சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. அவர் நாயகனாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. எப்போது வரும் என்று தெரியவில்லை. இதனிடையே, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்துள்ளார் சந்தானம். அதில் இரண்டு படங்களுக்கு எம்ஜிஆர், சிவாஜி படப் பாடல் வரிகளை தலைப்பாக வைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மெகா ஹிட்சாதனை படைத்த சந்தானம்- இத்தனை கோடி வசூலா தில்லுக்கு துட்டு?

சேதுராமன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ஓடி ஓடி உழைக்கணும், என்ற பெயரை வைத்துள்ளார். எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படத்தின் சூப்பர் ஹிட் பாடல் அது. அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு சக்கப் போடு போடு ராஜா எனப் பெயர் வைத்துள்ளார். சிவாஜிகணேசன் நடித்த பாரத விலாஸ் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல் அது. சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ள மற்றொரு படத்திற்கும் பழைய பாடல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். சீக்கிரமே அந்த பாடல் தலைப்பு வெளிவரும்.