பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பாளர்களை இப்பொழுது நடித்து வரும் இளைஞர்களுக்கு யார் என்றே தெரியவில்லை. அப்படித்தான் சமீபத்தில் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாமல் ஒருவருக்கு ஒருவர் சந்திக்க வந்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது
குட் நைட் மணிகண்டன் நன்றாக வளர்ந்து வருகிறார் அவரை வைத்து ஒரு படம் பண்ணலாம் என பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நினைத்துள்ளார். அவரை அழைக்கவே அவரும் இவரை சந்திப்பதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு வந்துள்ளார்.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்ததில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்தம்கூட இவர் தான் அவர் என்று கண்டுபிடிக்க முடியாமல். குழப்பத்தில் இருந்துள்ளனர். விஜயகாந்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை எடுத்தவர் ஆபாவாணன். இவர் தான் குட் நைட் மணிகண்டனை சந்திக்க வந்துள்ளார்.
விஜயகாந்த்தை வளர்த்து விட்ட தயாரிப்பாளர் பட்ட சங்கடம்
ஊமை விழிகள், இணைந்த கைகள், செந்தூரப்பூவே போன்ற படங்களில் தயாரித்தவர் ஆபாவாணன். குட் நைட் மணிகண்டனை வைத்து ஒரு படம் பண்ணுவதற்காக அவரை அணுகியுள்ளார். ஆனால் அவரை நேரில் பார்த்ததும் இவர் தான் அவர் என கண்டுபிடிக்க முடியாமல் திணறி உள்ளார்.
குட் நைட் மணிகண்டனுக்கு பதிலாக காக்கா முட்டை மணிகண்டனுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. இதனால் பெரும் குழப்பத்தில் ஒரே ஹோட்டலில் இருவரும் இருந்தும் கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறியுள்ளனர்.
கடைசியில் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்தும் கூட நீங்கள் மணிகண்டன் மாதிரி இல்லையே என்று கேட்ட பின்பு தான் அவர் காக்கா முட்டை மணிகண்டன் என ஆபாவாணனுக்கு தெரிந்திருக்கிறது. அது மட்டும் இன்றி போன் நம்பர் மாறிதால் வந்த குழப்பம் தான் இது